உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோழிங்கநல்லுாரில் மாறியது வழி

சோழிங்கநல்லுாரில் மாறியது வழி

சென்னை, ஓ.எம்.ஆரில், 20 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பாதை பணி நடக்கிறது. இதற்காக, முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. துரைப்பாக்கம் சந்திப்பில் மாற்றம் செய்யப்பட்டது. சோழிங்கநல்லுார் சந்திப்பில், ரவுண்டானா மேம்பாலம், மெட்ரோ ரயில் பணி மற்றும் மூடு கால்வாய் பணி நடக்க உள்ளதால், இந்த சிக்னலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதற்காக, சாலையின் மைய பகுதியில் தடுப்பு வைத்து, நேற்று முன்தினம் இரவு அடைக்கப்பட்டது. இதையடுத்து, காரப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னலில் இருந்து 250 மீட்டர் துாரம் சென்று 'யு - -டர்ன்' செய்து செல்ல வேண்டும்.அதுபோல், நாவலுாரில் இருந்து கே.கே.சாலை வழியாக, இ.சி.ஆர்., நோக்கி செல்வோர், சிக்னலில் இருந்து 250 மீட்டர் துாரம் சென்று, 'யு - -டர்ன்' எடுக்க வேண்டும்.இந்த போக்குவரத்து நடைமுறை, நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என, போக்குவரத்து போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை