திருவொற்றியூர் ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை
சென்னை:வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்படி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ், திருவொற்றியூரில் புதிதாக அரசின் தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ., துவக்கப்பட்டு உள்ளது.தற்போது, இங்கு மாணவர்களின் சேர்க்கை துவங்கியுள்ளது. பயிற்சியில் சேர கட்டணம் கிடையாது. சேர விரும்புவோர், நேரடியாக பயிற்சி நிலையத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, 98941 92652, 90920 60606 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.