உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அள்ளி கொடுக்கக்கூடிய ஆட்சி இது: சேகர்பாபு

அள்ளி கொடுக்கக்கூடிய ஆட்சி இது: சேகர்பாபு

கொளத்துார்,:கொளத்துார், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நடக்கும் கட்டுமான பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் பல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.பின், ஜி.கே.எம்., காலனி, சுப்ரமணியன் தெருவில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும், ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலை மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.இதனிடயே, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:கொளத்துார் தொகுதியில், அனைத்து வசதிகளுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. புதிதாக, 500 படுக்கைகள், எம்.ஆர்.ஐ., - சி.டி., ஸ்கேன் உள்ளிட்டவை அடங்கிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் 1ல் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி இறுதியில் மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.கடந்த ஆட்சி கிள்ளி கூட கொடுக்காத ஆட்சி; இந்த ஆட்சி அள்ளி கொடுக்ககூடிய ஆட்சி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை