உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில்வே பயிற்சி முடித்தவர்கள் வேலை கோரி போராட்டம்

ரயில்வே பயிற்சி முடித்தவர்கள் வேலை கோரி போராட்டம்

சென்னை, தெற்கு ரயில்வே மற்றும் பெரம்பூர் ஐ.சி.எப்., தொழிற்சாலையில், 2008 முதல் 2023ம் ஆண்டு வரை தொழில் பழகுனர் என்று கூறப்படும் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து, 17,000 பேர் வேலைக்கு காத்திருக்கின்றனர். இவர்கள், தங்களுக்கு ரயில்வேயில் வேலை வழங்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் நேற்று காலை முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்காமல், தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., புறக்கணித்து வருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகிறோம். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ