| ADDED : நவ 26, 2025 03:15 AM
மேடவாக்கம்: மேடவாக்கம் சந்திப்பு சாலையில், மர்ம நபர்கள் சிலர் காரில் போதை மாத்திரைகள் கடத்துவதாக, மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார், அங்கு வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, காருக்குள் போதை மாத்திரை கள் இருந்தன. காரில் இருந்த மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பம்மலைச் சேர்ந்த பிரகாஷ், 24, கோவிலம்பாக்கம் பார்த்திபன், 19, நிதிஷ்குமார், 19, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மும்பையில் போதை மாத்திரைகள் வாங்கி, ரயில் மூலம் கடத்தி வந்து, காரில் வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து, கைதான மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.