உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

டி.பி., சத்திரம் :ஷெனாய் நகர், ஜோதியம்மாள் நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் இளையசூர்யா, 29. இவர், கடந்த 22ம் தேதி இரவு, அதே பகுதியில் உள்ள ஏழாவது தெரு முனையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது, அவருக்கு தெரிந்த, அயனாவரம், சோலை மூனறாவது தெருவைச் சேர்ந்த நிவாஸ், 26, மற்றும் இருவர், இருசக்கர வாகனத்தில் வந்தனர்.இளையசூர்யாவிடம், நிவாஸ் பேசிக் கொண்டிருந்த போது, மற்ற இருவரும் கையால் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாய் பணத்தை பறித்து தப்பினர்.டி.பி., சத்திரம் போலீசார் விசாரித்து, அயனாவரத்தை சேர்ந்த யஷ்வந்த், 19, மற்றும் சுமன், 19, மற்றும் நிவாஸ் ஆகிய மூவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை