மேலும் செய்திகள்
கஞ்சா - குட்கா கடத்திய 2 வாலிபர்கள் கைது
20-Jul-2025
செம்மஞ்சேரி ஓ.எம்.ஆரில் போதை பொருட்கள் விற்பனை செய்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். ஓ.எம்.ஆர்., பழத்தோட்ட சாலையில், போதை பொருள் விற்கப்படுவதாக, செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று அங்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, மூன்று பேர் கஞ்சா மற்றும் மெத் ஆம்பெட்டமைன் ஆகிய போதை பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். விசாரணையில், படூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 23, வீரப்பன், 30, பிரசாந்த், 31, என தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சா மற்றும் 5 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
20-Jul-2025