வாலிபர் கொலையில் மூவர் கைது
மாதவரம் :மாதவரம், சின்ன மாத்துார் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 43. வெல்டிங் தொழிலாளி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ஜெயபிரகாஷ், 43; லாரி டிரைவர். அவரது மனைவியுடன், மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து இரு தினங்களுக்கு முன், மணிகண்டனை சரமாரியாக வெட்டி தப்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த மாதவரம் பால் பண்ணை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். நேற்று முன்தினம், மாதவரம் ரவுண்டானா ஆந்திரா பேருந்து நிலையத்தில், கொலையாளிகள் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் மூவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான ஐ.ஓ.சி., பகுதியை சேர்ந்த சரண்ராஜ், 24, மணலியைச் சேர்ந்த வினோத்குமார், 32, என தெரியவந்தது.