உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலாளி மண்டை உடைப்பு மூன்று வட மாநிலத்தவர் கைது

காவலாளி மண்டை உடைப்பு மூன்று வட மாநிலத்தவர் கைது

மடிப்பாக்கம் : மடிப்பாக்கம் ராம் நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக வேல்முருகன், 48, என்பவர், குடும்பத்துடன் தங்கி பணியாற்றுகிறார். இந்த குடியிருப்பு அருகில், ஒரு புதிய கட்டட கட்டுமான பணி நடக்கிறது. அங்கு, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, 10 தொழிலாளர்கள் தங்கி பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இரவு, அவர்கள் குடித்துவிட்டு சத்தமிட்டதால், அவர்களை வேல்முருகன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில், வேல்முருகனை அவர்கள் தாக்கினர். இதில் மண்டை உடைந்த வேல்முருகனுக்கு, மருத்துவமனையில் 8 தையல்கள் போடப்பட்டன. புகாரின்படி வழக்கு பதிந்த மடிப்பாக்கம் போலீசார், காவலாளியை தாக்கிய மனோஜ் ராய், 38, அவரது தம்பி கிஷோர் ராய், 35, டெபு சர்கார், 39, ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி