உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெள்ளத்தில் சிக்கிய:காரில் தவித்த மூவர் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய:காரில் தவித்த மூவர் மீட்பு

பெரம்பூர்: பெரம்பூரில் வெள்ளத்தில் சிக்கிய சொகுசு காரில், சிக்கி தவித்த மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கொடுங்கையூர், விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் அரசு, 40. இவர், மனைவி மற்றும் 10 வயது மகனுடன் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதையின்கீழ், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் தன் பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது , சுரங்கப்பாதையில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. அதில் சென்றபோது திடீரென கார் வெள்ளத்தில் சிக்கி நின்றது. மேலும், காரின் கதவுகளும் திறக்க முடியாமல் 'லாக்' ஆனது. உள்ளே இருந்த மூவரும் வெளியேற முடியாமல் தவித்தனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பியம் மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு துறையினர், காரில் இருந்தவர்களை மீட்க ஒரு மணி நேரம் போராடியும் முடியவில்லை. தகவலறிந்து வந்த பி.எம்.டபிள்யூ கார் ஷோரூம் மெக்கானிக்குகள், காரின் நான்கு சக்கரங்களையும் கழற்றினர். இதையடுத்து கதவு திறக்கப்பட்டு மூவரையும் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி