மேலும் செய்திகள்
இன்று இனிதாக (14/03/2025/வெள்ளி)
14-Mar-2025
ஆன்மிகம்பங்குனி பெருவிழா கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில், வெள்ளி சூரிய வட்டம், காலை 8:30 மணி. சந்திரவட்டம், கிளி, அன்ன வாகன புறப்பாடு, இரவு 9:00 மணி. சிறப்பு நாதஸ்வர தவில் நிகழ்ச்சி, மாலை 6:30 மணி முதல், இடம்: மயிலாப்பூர்.மருந்தீஸ்வரர் கோவில்பங்குனி பெருவிழாவில் சந்திரசேகர் சூரிய பிரபையில் எழுந்தருளுதல், காலை 9:00 மணி. சந்திர பிரபையில் உலா, இரவு 8:30 மணி. இடம்: திருவான்மியூர்.மல்லிகேஸ்வரர் கோவில்சூரிய பிரபையில் சுவாமி எழுந்தருளல், காலை 7:30 மணி; சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 7:00 மணி. இடம்: முத்தியாலுபேட்டை, லிங்கி செட்டி தெரு, மண்ணடி.கும்பாபிஷேகம்சுந்தர விநாயகர் கோவில், மஹா கும்பாபிஷேகம், காலை: 8:30 - 10:30 மணிக்குள். இடம்: நேதாஜி நகர், 5வது வீதி, தண்டையார்பேட்டைமுனீஸ்வரன் - வெட்டுடையாள் காளியம்மன் கோவில், திருகுடமுழுக்கு பெருவிழா, காலை 8:30 - 10:30 மணிக்குள், இடம்: தியாகி சத்தியமூர்த்தி நகர், திருவொற்றியூர்சுவாமி வீதியுலாகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கோதண்டராமர் கர்ப்ப உற்சவத்தின் ஏழாம் நாள், சீதாராமர் தேரில் எழுந்தருளி, மாடவீதி உலா வரும் வைபவம், இடம் மாலை: 6:30 மணி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர்உபன்யாசம்ஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன், சாரதாம்பாள் கோவில், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.பார்த்தசாரதி பெருாள் கோவில்ராமர் மண்டப திருமஞ்சனம், காலை 9:00 மணி. ராமர் அம்ச வாகன பெரிய வீதி புறப்பாடு, மாலை 5:00 மணி. திருக்கட்சி நம்பிகள், உடையவர் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.வீராத்தம்மன் கோவில்விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை. ஆதிபுரீஸ்வரர் கோவில்துர்கைக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. சிவசுப்ரமணிய சுவாமி கோவில்சுக்ர வார பூஜை ,காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.ஓம் கந்தாஸ்ரமம்காளராத்ரி பிரத்யங்கிரா மூல மந்திர ஹேமம், அபிஷேகம், காலை 10:30 மணி. மகா பூர்ணாஹுதி, இரவு 7:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.சுந்தரராஜ பெருமாள் கோவில்பங்குனி வெள்ளிக்கிழமை, தாயாருக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம்.பொதுபெலா பெஸ்ட்பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம், மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.
14-Mar-2025