மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய இருவர் கைது
28-Oct-2024
* அசோக் நகர் 100 அடி சாலையில், கேரள மாநிலம், பரப்புரத்தைச் சேர்ந்த அஸ்கர் தயட்டுசிரா, 37, என்பவரிடம் 3 கிலோ கஞ்சாவை, பரங்கிமலை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். * அயனாவரத்தில், பெரம்பூரைச் சேர்ந்த மார்டின் ஜோஸ்வா, 31, என்பவரிடம், 60,000 ரூபாய் மதிப்புள்ள, 4.58 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 1.05 கிராம் 'ஓ.ஜி.,' கஞ்சா, ஐந்து எல்.எஸ்.டி., போதை 'ஸ்டாம்ப்'பை பறிமுதல் செய்தனர். இதை,'சப்ளை' செய்த, பெங்களூரு கல்லுாரி மாணவர் சூர்யா 24, என்பவரிடம், ஐந்து போதை ஸ்டாம்ப்பை பறிமுதல் செய்தனர்.* கொடுங்கையூரில் கஞ்சா எண்ணெய் விற்ற வழக்கில், ஆந்திராவை சேர்ந்த வினோத்குமார், 29; ஒடிசாவை சேர்ந்த சுராஜ் பரதன், 22; வேளச்சேரியை சேர்ந்த அனிஷ், 26 ஆகிய மூவரையும் போலீசார் தேடி வந்தனர். கொடுங்கையூர் மீனாட்சி நகரில் பதுங்கியிருந்த மூவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 9 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யபப்ட்டன.* மேற்கு மாம்பலம், மேட்டுபாளையத்தைச் சேர்ந்த பைக் மெக்கானிக் ரமேஷ்குமார், 43, என்பவரிடம் நேற்று, விருகம்பாக்கத்தில் 1.2 கிலோ கஞ்சாவை, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
28-Oct-2024