உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மின் வாரியம் தோண்டிய பள்ளத்தால் வாழ்வாதாரம் இழக்கும் வியாபாரிகள்

 மின் வாரியம் தோண்டிய பள்ளத்தால் வாழ்வாதாரம் இழக்கும் வியாபாரிகள்

பெருங்குடி: பெருங்குடி மண்டலம், வார்டு 184க்கு உட்பட்டது பெருங்குடி. இங்குள்ள திருமலை நகர் இரண்டாவது தெருவும், ஓ.எம்.ஆரும் இணையும் பகுதியில், கடந்த 10 நாட்களுக்கு முன், மின் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளம், இதுவரை மூடப் படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து, அத்தெருவில் உள்ள கடை உரிமையாளர்கள் கூறியதாவது: கடந்த நவ., 22ல் மின்வாரிய அதிகாரிகளால், இந்த பள்ளம் 15 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டது. ஆனால், பணி நிறைவு பெறாததால், தற்போது வரை மூடப்படாமல் போ க்குவரத்துக்கு தடையாக திறந்த நிலையில் உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து, கடந்த 10 நாட்களாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் கடையை மூடி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தரமணியில் இருந்து பெருங்குடிக்கு வரும் மின் தடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீர்செய்ய இந்த பள்ளம் தோண்டப்பட்டது. எங்கு பாதிப்பு உள்ளதென கண்டறிய இயலாததால், பணி முடிவுறாமல் உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை