உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிரேடிங் நிறுவனம் முற்றுகை

டிரேடிங் நிறுவனம் முற்றுகை

சென்னை, அண்ணா சாலையில் எல்.ஐ.சி., அருகே 'ரகஜா' கோபுரத்தில் 'ஏற்றம் டிரேடர்ஸ்' என்ற பெயரில், தனியார் டிரேடிங் நிறுவனம் இயங்குகிறது.இந்த நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வட்டி தருவதாக, விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி, பலர் முதலீடு செய்துள்ளனர்.நான்கு ஆண்டுகள் முறையாக பணத்தை கொடுத்து வந்துள்ளனர். ஆனால், கடந்த 2023ல் இருந்து, முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.ஏமாற்றப்பட்டவர்களில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்து, சமாதானம் செய்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ