மெரினாவில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும், 'டிரையத்லான்' போட்டி, நாளை காலை 4:30 மணி முதல் 10:30 மணி வரை நடக்க உள்ளது. அதற்கான பயிற்சி, அதே நேரத்தில் இன்று நடக்கிறது. இதற்காக மெரினாவில், இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.l பாரிமுனையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் போர் நினைவிடம் நோக்கி அனுமதிக்கப்படாது. ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் வடக்கு கோட்டை சாலை - முத்துசாமி பாலம் - அண்ணாசாலை நோக்கி திருப்பி விடப்படும்l காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்களும் நேப்பியர் பாலம் நோக்கி அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே வாலாஜா சாலை - அண்ணாசாலை நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜா சாலை வழியாக வரும் வாகனங்கள், கண்ணகி சிலையை நோக்கி திருப்பிவிடப்படாது. உழைப்பாளர் சிலையில் இருந்து எம்.டி.சி., பஸ்கள் அண்ணாசதுக்கம் பேருந்து நிலையம் செல்ல மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படும்l சுவாமி சிவானந்தா சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், பெரியார் சிலை அருகே அண்ணாசாலை - வாலாஜா முனை, அண்ணாசாலை நோக்கி திருப்பிவிடப்படும்l முத்துசாமி பால முனையிலிருந்து கொடி மரச்சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் வாலாஜா முனையில், அண்ணாசாலை - பல்லவன் சாலை - பெரியார் சிலை - அண்ணாத்துரை சிலை நோக்கி திருப்பிவிடப்படும்l ஈ.வெ.ரா., சிலையிலிருந்து வாலாஜா முனை வரை, வெளியே செல்லும் வாகனங்கள் ஒரு திசையில், இருபுறமும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.