போக்குவரத்து போலீஸ்காரர் கன்டெய்னர் லாரி மோதி பலி
சென்னை;கன்டெய்னர் லாரி மோதியதில், பைக்கில் சென்ற போக்குவரத்து போலீஸ்காரர் உயிரிழந்தார். மாதவரம், காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவி குமார், 50. இவர், மாதவரம் போக்குவரத்து காவல் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ரெட்டேரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, ரவி குமார் ஓட்டிச் சென்ற பைக் மீது உரசியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ரவிக்குமாரின் வலது கால் மீது, கன்டெய்னர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநரான பீஹாரைச் சேர்ந்த ரமேஷ் ஷா, 52, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.