மேலும் செய்திகள்
பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது
11-May-2025
புதுவண்ணாரப்பேட்டை:சென்னை புதுவண்ணாரப்பேட்டை, ஏ.ஏ.ஸ்கீம் சாலையில், வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் சென்று, உடலை பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அதில், நடைபாதையில் வசித்து வந்த கூலி தொழிலாளி ஜான்பாஷா, 35 என்பவர் உயிரிழந்தது தெரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் நடைபாதையில் படுத்திருந்த ஜான்பாஷாவிடம் காசிமேடு, தேசிய நகரை சேர்ந்த திருநங்கை மலயா, 40 என்பவர் ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். ஜான்பாஷா மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த மலயா, குடிபோதையில் இருந்த ஜான்பாஷாவை கழுத்து, வயிற்று பகுதியில் கையால் தாக்கினார். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த ஜான் பாஷா உயிரிழந்துள்ளார். மலயாவை போலீசார் கைது செய்தனர்.
11-May-2025