உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழங்குடியினர் கலாசாரம் வேளச்சேரியில் மாநாடு

பழங்குடியினர் கலாசாரம் வேளச்சேரியில் மாநாடு

சென்னை, 'பழங்குடியினரின் கலாசாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்' என்ற தலைப்பில், இரண்டு நாள் தேசிய தொல்குடி மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது.முதல் நாள் மாநாடை, வேளச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை தலைவர் கயல்விழி, துவக்கி வைத்து பேசினார்.மாநாட்டில் தோடர் இனத்தினரின் அரங்கு மற்றும் குறும்பர் ஓவியங்கள் உடைய அரங்கு, பார்வையாளர்களை கவர்ந்தது.இத்தேசிய மாநாடு பல்வேறு கருப்பொருள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. குழு விவாதங்கள் நடத்தப்படுகின்றன.நேற்று மாலை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடந்தது.தமிழகப் பழங்குடியினரின் பண்பாட்டு நிகழ்வுகளை எடுத்துரைக்கும் விதமாக, கணியன் கூத்து, பளியர், குருமன்ஸ் போன்ற பழங்குடியினரின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இவை, பார்வையாளர்களை கவர்ந்தது.நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடனக் கலைஞர்களுக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஹர்சகாய் மீனா, அனுஜார்ஜ், பூஜா குல்கர்ணி, அருண்ராய் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.பழங்குடியினர் நலத்துறை மற்றும் சென்னை சமூகப் பணி பள்ளியின் சமூக நீதி மற்றும் சமத்துவ மையத்துடன் இணைந்து, இம்மாநாடு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ