மேலும் செய்திகள்
திருமங்கலத்தில் இன்று குறைதீர் முகாம்
30-Apr-2025
திருமங்கலம்,:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்பாபு, 49. இவர், திருமங்கலத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், மேலாளராக பணி செய்து வருகிறார்.கடந்த 16ம் தேதி, அலுவலகத்திற்கு வந்த எட்டு பேர், சதீஷ் பாபுவிடம் தகராறு செய்து, அவரை தாக்கினர். இதில், காயமடைந்த சதீஷ்பாபு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து, திருமங்கலம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், பெரம்பூரைச் சேர்ந்த மோகன்ராஜ், 49, மற்றும் சாதிக்பாஷா, 41, ஆகியோர் கார் ஓட்டி வந்தனர்.இவர்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருந்ததாக தெரிகிறது. அந்த பணத்தை கேட்க வந்த போது, 65,000 ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளனர்.இதனால் ஏற்பட்ட தகராறில், சதீஷ்பாபுவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, மோகன்ராஜ் மற்றும் சாதிக்பாஷா ஆகிய இருவரையும், திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
30-Apr-2025