உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரிடம் பணம் பறித்த இருவர் கைது

வாலிபரிடம் பணம் பறித்த இருவர் கைது

புளியந்தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பையன், 18 கடந்த 23ம் தேதி சென்னை வந்த இவர் புளியந்தோப்பு காந்தி நகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த இருவர், கருப்பையனை தாக்கி அவர் வைத்திருந்த 3,750 ரூபாயை பறித்து சென்றனர்.இதுகுறித்து கருப்பையன் பேசின்பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், புளியந்தோப்பை சேர்ந்த ஆகாஷ், 23 மற்றும் திவாகர், 19 ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆகாஷ் மீது வழிப்பறி உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை