உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆன்லைனில் கஞ்சா விற்ற இருவர் கைது

ஆன்லைனில் கஞ்சா விற்ற இருவர் கைது

திரு.வி.க., நகர்:திரு.வி.க., நகர் பல்லவன் சாலை விளையாட்டு மைதானத்தில் சிலர் கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற திரு.வி.க., நகர் போலீசார், அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்து, அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திர மாநிலம், சித்துாரில் குமாரி என்பவரிடமிருந்து, 25,000 ரூபாய் பணம் கொடுத்து கஞ்சா வாங்கி வந்து, இங்கு 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்தது தெரிந்தது.பிடிபட்டவர்களில் 17 வயதுடைய சிறுவன், கெல்லீஸ் காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். மற்றொருவரான பெரவள்ளூரைச் சேர்ந்த நிகேஷ்,19, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி