உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேஷன் அரிசியை பதுக்கி விற்ற இருவர் கைது

ரேஷன் அரிசியை பதுக்கி விற்ற இருவர் கைது

திருவொற்றியூர், திருவொற்றியூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது திருவொற்றியூர், உதயசூரியன் நகர், துறைமுக குடியிருப்பு சுற்றுச்சுவர் அருகே, ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதில் தொடர்புடைய திருவொற்றியூர், கணக்கர் தெருவைச் சேர்ந்த திலீப், 34, என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, எண்ணுார் சுற்றுவட்டார பகுதியில் தங்கி வேலை பார்த்துவரும் வெளிமாநில கூலித் தொழிலாளிகளுக்கு, கிலோ 5 ரூபாய்க்கு விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து, 1,025 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

வியாசர்பாடி

சென்னை குடிமைப்பொருள் வழங்கல் துறை போலீசார், நேற்று முன் தினம் வியாசர்பாடி, கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.அங்கு ஆந்திராவிற்கு கடத்திச் செல்ல, 21 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 1,050 கிலோ ரேசன் அரிசி சிக்கியது. அரிசி கடத்தல் தொடர்பாக, வியாசர்பாடியை சேர்ந்த இன்பரசன், 27, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை