உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வணிக வரி அதிகாரியை மிரட்டிய இருவர் கைது

வணிக வரி அதிகாரியை மிரட்டிய இருவர் கைது

மதுரவாயல்: வணிக வரித்துறையின் மாநில துணை வணிக வரி அலுவலர் அசோக்குமார், நேற்று காலை, மதுரவாயல் - ஆலப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள கடைகளில் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, ஜெய் ஸ்ரீராம் என்ற மொபைல் போன் கடையில் சோதித்தனர். அங்கு அடுக்கி வைத்திருந்த மின்சாதன பொருட்களின் ஜி.எஸ்.டி., வரி விபரம் குறித்து விசாரித்தனர். அங்கிருந்தவர்கள் முறையாக பதிலளிக்காததால், மொபைல் போனில் பதிவு செய்ய முயன்றனர். அப்போது, இருவர் அதிகாரிகளை தகாத வார்த்தையால் பேசி, லஞ்சம் கேட்பதாக பொய் வதந்தியை பரப்பி, கொலை மிரட்டல் விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், மொபைல் போன் கடையின் உரிமையாளரான மதுரவாயலை சேர்ந்த தீலீப்குமார், 38, அவரது சகோதரர் கவுதம், 28, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !