உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை வழக்கில் இருவர் கைது

போதை வழக்கில் இருவர் கைது

புழல்:புழலில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த தகவலின் அடிப்படையில், சூளகிரிக்கு தனிப்படை போலீசார் சென்றார். அங்குள்ள பேருந்து நிலையில், மூவரை பிடிக்க முற்பட்ட போது, இருவர் சிக்கினர்; ஒருவர் தப்பியோடினார். பிடிபட்ட இருவரிடம் விசாரித்த போது, அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த முகமது நகீப், 24 மற்றும் சையது இம்ரான் பாஷா, 43 என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2.6 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவு நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை