உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  லாரி டயரில் சிக்கிய பைக் வாலிபர்கள் 2 பேர் பலி

 லாரி டயரில் சிக்கிய பைக் வாலிபர்கள் 2 பேர் பலி

பூந்தமல்லி: லாரி உரசியதில், டயரில் இருசக்கர வாகனம் சிக்கி, இரு வாலிபர்கள் பலியாகினர். பூந்தமல்லி அருகே, சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் நிர்மல், 19; திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். சென்னீர்குப்பத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கிடங்கில் பகுதி நேரமாக, இரவு பணி செய்து வந்தார். உடன், சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சந்தோஷ்,18, என்பவரும் பணிபுரிந்தார். இருவரும் பணி முடித்து, 'கே.டி.எம்., டியூக்' இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பாரிவாக்கம் பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்று கொண்டி ருந்தனர். பாரிவாக்கம் சிக்னல் அருகே, கோழிகளை ஏற்றிச்சென்ற லாரி உரசியதில், அ தன் டயரில் இருசக்கர வாகனம் சிக்கியதில், நிர்மல், சந்தோஷ் ஆகிய இருவரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுநரான ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நசீர், 39, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ