உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியால் வெட்டி செயின் பறிப்பு இருவர் கைது

கத்தியால் வெட்டி செயின் பறிப்பு இருவர் கைது

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் மகேந்திரன், 40; 'ஏசி' மெக்கானிக். இவர், நேற்று முன்தினம், சோழிங்கநல்லுார் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவரை வழிமறித்த இரண்டு பேர், கத்தியால் அவரது தலையில் வெட்டி நகை, மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றனர்.இதுகுறித்து, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த தமிழ்செல்வன், 21, தமிழரசன், 24, என தெரிந்தது. போலீசார் நேற்று, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்