சைக்கிள் திருடிய வழக்கில் பெண் உட்பட இருவர் கைது
முகப்பேர் கிழக்கு:முகப்பேர் கிழக்கு, கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி, 31. இவரது மகன் பள்ளிக்கு செல்ல பயன்படுத்தும் சைக்கிளை, வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தனர்.கடந்த ஒன்றாம் தேதி மாலை, அங்கு, 'டி.வி.எஸ் ஸ்கூட்டி'யில் வந்த ஆண் மற்றும் பெண், சைக்கிளை திருடி சென்றனர்.இது குறித்து, ஜெ.ஜெ., நகர் போலீசில் ரேவதி புகார் அளித்தார். 'சிசிடிவி' காட்சிகளின் படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில், சைக்கிளை திருடியது, அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரபீக் முகமது தீன், 39, அவரது தோழி ஸ்ரீதேவி, 34, என தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த சைக்கிள் மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.