உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனங்களை உடைத்த இரு ரவுடிகள் சிக்கினர்

வாகனங்களை உடைத்த இரு ரவுடிகள் சிக்கினர்

சேத்துப்பட்டு, சேத்துப்பட்டு, பிருந்தாவனம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா, 27. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியில் தன் காரை நிறுத்தியுள்ளார். இரவு, 11:45 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த இரு ரவுடிகள், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜெயசூர்யாவின் கார் உட்பட மூன்று கார்கள், ஆறு ஆட்டோக்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பினர்.விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது, சேத்துப்பட்டு எம்.எஸ்., நகரைச் சேர்ந்த குகன், 19, பிருந்தாவனம் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தனுஷ்ராஜ், 20, என தெரிந்தது. பழைய குற்றவாளிகளான இருவரையும், போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ