சிறுமி பலாத்காரம் இருவருக்கு ஆயுள் தண்டனை
சென்னை,பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி. இவரை, 2018ம் ஆண்டு, இ.சி.ஆரை., சேர்ந்த ரஹமதுல்லா, 41, சாகுல்ஹமீது, 44, ஆகியோர், பாலியல் பலாத்காரம் செய்தனர். கானத்துார் போலீசார், இரண்டு பேரையும் கைது செய்தனர்.இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, நேற்று, ரஹமதுல்லா, சாகுல்ஹமீது ஆகியோருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் தலா 3,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.