உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உ.பி., மாநில பலே திருடன் வியாசர்பாடியில் சிக்கினான்

உ.பி., மாநில பலே திருடன் வியாசர்பாடியில் சிக்கினான்

சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பயணியரிடம் அடிக்கடி மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயின.இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் ஏராளமான புகார்கள் வந்தன. சென்ட்ரல் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து திருடனை தேடி வந்தனர். இந்த நிலையில், வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த ஆசாமியை, ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.விசாரணையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்திரா, 31, என்பதும், சென்னையில் ரயில் நிலையங்களில், பயணியரின் அவசரத்தை சாதகமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.பயணியரிடம் மொபைல் போன், பர்ஸ் மற்றும் நகைகளை பறித்துச் செல்வதை வாடிக்கையாக கொண்ட சுரேந்திரா, அவற்றை விற்று டில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார். இவரிடமிருந்து, 14 சவரன் தங்க நகை, பணம் மற்றும் பயணியரிடம் இருந்து திருடிய வங்கி அட்டை, ஆதார் உள்ளிட்ட பல ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை