உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிற்பேட்டை சாலை முதல்வர் நிகழ்ச்சியால் சீரமைப்பு

தொழிற்பேட்டை சாலை முதல்வர் நிகழ்ச்சியால் சீரமைப்பு

சென்னை, சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் வாகன உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அவை, தங்களின் தயாரிப்பு வடிவமைப்பு, சோதனை போன்றவற்றுக்கு, பெரிய நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. இதற்காக அந்நிறுவனங்களுக்கு, அதிகம் செலவாகிறது.இந்நிலையில், பல்லாவரம் - திருநீர்மலை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்களை, குறித்த காலத்தில் சந்தைக்கு அனுப்ப முடியாமல் பாதிக்கப்படுகின்றன. எனவே, பல்லாவரம் - திருநீர்மலை சாலையை சீரமைப்பதுடன், விரிவாக்கம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், திருமுடிவாக்கத்தில் உள்ள தமிழக அரசின் 'சிட்கோ' தொழிற்பேட்டையில், துல்லிய இன்ஜினியரிங் பொருட்களின் உற்பத்தி சோதனைக்கு பயன்படும் பொது வசதி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு, புதிய பொருட்கள் தயாரிப்பிற்கான கணினி மென்பொருள் வசதி, '3டி பிரிண்ட்டட்' தொழில்நுட்பம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள், 47 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையத்தை, சிறு தொழில் நிறுவனங்கள், குறைந்த வாடகை கட்டணத்தில் பயன்படுத்தலாம்.இதை, முதல்வர் ஸ்டாலின் வரும், 26ம் தேதி துவக்கி வைக்கிறார். இதற்காக, அந்த தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இது, தொழில்முனைவோர்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ