உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிண்டி தொழிற்பேட்டையில் 1,707 வீடுகள் கட்டுகிறது நகர்ப்புற வாழ்விட வாரியம்

 கிண்டி தொழிற்பேட்டையில் 1,707 வீடுகள் கட்டுகிறது நகர்ப்புற வாழ்விட வாரியம்

சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில், 1,707 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளை, நகர்ப்புற வாழ்விட வாரியம் துவக்கி உள்ளது. சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏழை மக்களுக்கான குடியிருப்புகளை கட்டி வருகிறது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் வாயிலாக இதற்கான நிதி பெறப்படுகிறது. இந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் பழைய குடியிருப்புகளை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை இந்த வாரியம் கட்டி வருகிறது. இதில் ஏற்கனவே இருந்தவர்களுடன் புதிய ஒதுக்கீட்டாளர்களுக்கும், வீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, 300 வீடுகள் இருந்த இடத்தில் பழைய கட்டடத்தை இடித்து, 800 வீடுகள் அடங்கிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள் ளது.அந்த வகையில், கிண்டி தொழிற்பேட்டையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டிய நிலங்கள் நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் 10 பிரிவுகளாக ஒவ்வொன்றும், ஒன்பது தளங்களுடன் குடியிருப்பு கட்ட, வாரியம் திட்டமிட்டது. இங்கு, மொத்தம், 1,707 வீடுகள் கட்டும் பணி துவங்கி உள்ளது. 'ப்ரீகாஸ்ட்' எனப்படும் முன்தயாரிப்பு தொழில்நுட் பத்தை பயன்படுத்தி இந்த குடியிருப்பு கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி