உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பராமரிப்பின்றி அசுத்தமான வைத்தீஸ்வரன் கோவில் குளம்

பராமரிப்பின்றி அசுத்தமான வைத்தீஸ்வரன் கோவில் குளம்

பூந்தமல்லி நகராட்சியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் செவ்வாய் தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. கோவிலின் கிழக்கு புறம் வினை தீர்த்த குளம் உள்ளது.இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால், முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், குளத்தை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன.அருகில் உள்ள குடியிருப்பில் இருந்து குளத்தை சுற்றி குப்பை கொட்டப்படுகிறது. இவை காற்றில் பறந்து குளத்தில் விழுந்து அசுத்தமாகி வருகிறது.கோவில் குளத்தை சுத்தமாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.- துர்கா, பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhaskaran
அக் 23, 2024 15:06

முதலில் மக்கள் அங்கு குப்பையை போடாமல் இருக்க வேண்டும்


அப்பாவி
அக் 22, 2024 19:08

ஓசி சோறு, பிரசாதம்னு குடுங்க. போட்டி போட்டுக்கிட்டு வந்து நிப்பாங்க. துண்ணுட்டு குப்பையை வீசிட்டு போயிடுவாங்க.


Palani
அக் 22, 2024 06:27

புண்ணியம் செய்யாட்டியும் பாவம் செய்யாதீங்க மக்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை