| ADDED : மார் 09, 2024 12:24 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது வேன் மோதியது. இதில் பெண் இறந்தார்; அவரது ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் மனைவி மேரி கிளாரா, 40. இவர், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் தங்கி, பிள்ளையார் கோவில் அருகே நெடுஞ்சாலையோரம் தள்ளு வண்டியில் பழச்சாறு கடை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் முடிந்ததும், தன் ஒன்றரை வயது பெண் குழந்தை தியாவை அழைத்துக்கொண்டு டி.வி.எஸ்., எக்செல் ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின், சர்வீஸ் சாலையில் சென்றபோது, எதிரே தவறான பாதையில் வந்த மஹிந்திரா வேன் மோதியது. இதில், மேரி கிளாரா சம்பவ இடத்திலேயே இறந்தார். குழந்தை தியா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தண்டலம் சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.வேன் ஓட்டுனர் திருமழிசையை சேர்ந்த முகுந்தன், 26, என்பவரை கைது செய்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.