உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரும்பு ராடால் தாக்கி ஊழியர் சித்ரவதை வண்ணாரப்பேட்டை பா.ஜ., பிரமுகர் கைது

இரும்பு ராடால் தாக்கி ஊழியர் சித்ரவதை வண்ணாரப்பேட்டை பா.ஜ., பிரமுகர் கைது

வண்ணாரப்பேட்டை, சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ், 30; பா.ஜ., பிரமுகர்.இவர், வண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன், 3வது தெருவில், கே.ஜி.எப்., என்ற பெயரில் மூன்று துணிக்கடைகளை நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில், துணி விற்பனை குறித்த வீடியோ பதிவிட்டு பிரபலமானவர்.இவரது கடையில் வேலை பார்த்த ரிஸ்வான், 19, என்பவர், சமீபத்தில் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.இந்நிலையில், கடந்த ஏப்., 17ம் தேதி, வண்ணாரப்பேட்டைக்கு வந்த ரிஸ்வானை, ஊழியர்கள் கடைக்கு அழைத்து சென்றனர்.பின், 1.30 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, கடையின் கிடங்கில் அடைத்து வைத்துள்ளனர். இரு நாட்களாக இரும்பு ராடாடல் அடித்து காயப்படுத்தி உள்ளனர்.ரிஸ்வான் அடைக்கப்பட்டுள்ள விபரம் அறிந்த உறவினர்கள், அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த வண்ணாரப்பேட்டை போலீசார், கடை உரிமையாளர் விக்னேஷ் துாண்டுதலின்படி தாக்கிய ஊழியர்கள் சசிகுமார், 21, சச்சின், 20, ஆகியோரை கைது செய்தனர்.முக்கிய குற்றவாளியான விக்னேஷ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் தேடி வந்த நிலையில், சேலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, சேலம் சென்ற தனிப்படை போலீசார், விக்னேஸ்வரனை அங்கு கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.சிறுவர்களை, கடையில் பணிக்கு அமர்த்திய காரணத்திற்காக, கே.ஜி.எப்., துணிக்கடையின் உரிமையாளர் விக்னேஷ் மீது, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.வியாபார போட்டி காரணமாக, ரவுடிகளை ஏவி, சக கடை உரிமையாளரை தாக்கியதாக இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ