உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வில்லன் நடிகர் - போலீஸ் இன்ஸ்., திருவொற்றியூரில் வாக்குவாதம்

 வில்லன் நடிகர் - போலீஸ் இன்ஸ்., திருவொற்றியூரில் வாக்குவாதம்

திருவொற்றியூர்: அம்பேத்கர் சிலைக்கு சுற்றுச்சுவர் எழுப்பும் விவகாரத்தில், வில்லன் நடிகர் தீனா - திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் ரஜினிஸ் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. திருவொற்றியூர், சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே, 1991ம் ஆண்டு, அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், சிலைக்கு பின்புறம் உள்ள இடத்தை, தனியார் நிறுவனம் வாங்கி, மனை பிரிவு மற்றும் கடைகளை அமைத்து வருகிறது. அம்பேத்கர் சிலை பராமரிப்பாளர்கள், பாதுகாப்பு கருதி, சிலையைச் சுற்றி சுவர் எழுப்பினர். இதற்கு, காவல் துறை தரப்பில் இருந்து மறைமுக எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிய, இதனால் திரைப்பட வில்லன் நடிகர் தீனா, வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி உட்பட, 50க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் காவல் நிலையம் சென்றுள்ளனர். அங்கு, காவல் ஆய்வாளரை பார்க்க வெகு நேரமாக காக்க வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சுங்கச்சாவடி அம்பேத்கர் சிலை அருகே, நேற்று மாலை ஒன்று கூடினர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ரஜினிஸ், சமரச பேச்சு நடத்தினார். அப்போது, நடிகர் தீனா - காவல் ஆய்வாளர் ரஜினிஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், சிலை பராமரிப்பு தொடர்பாக, இன்று காவல் நிலையத்தில் சமரச பேச்சு நடத்துவதாக கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !