உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு விழுப்புரம் வாலிபருக்கு 14 ஆண்டு சிறை 

மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு விழுப்புரம் வாலிபருக்கு 14 ஆண்டு சிறை 

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், அன்னம்பேடு கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில், கடந்த 2007ல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்தார்.அதே செங்கல் சூளையில், விழுப்புரம், சங்கரா புரத்தைச் சேர்ந்த திருமலை, 19, மற்றும் விழுப்புரம், கச்சிரா பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த், 20, ஆகியோர் பணி புரிந்தனர்.இந்த நிலையில், கடந்த 2007 ஏப்., 8ம் தேதி இரவு, இளம்பெண் அறையில் துாங்கி கொண்டிருந்த போது, திருமலை மற்றும் ஆனந்த் ஆகியோர், அவரை செங்கல்சூளை பின்புறம் துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார் திருமலை, ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜாமினில் வெளியே வந்த ஆனந்த், தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.திருமலை, 2013 முதல் 2022 வரை, ஒன்பது ஆண்டுகள், விருதுநகரில் தலைமறைவாக இருந்தார். பட்டாபிராம் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர் விசாரணையில் திருமலை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.இதையடுத்து, மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது 38 வயதாகும் திருமலை, 38, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை