உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளிகள் மேம்பட நிதி தந்த விஸ்வநாதன் மகன்

மாற்றுத்திறனாளிகள் மேம்பட நிதி தந்த விஸ்வநாதன் மகன்

சென்னை,'தி குட் டீட்ஸ் கிளப்' சார்பில், பொங்கல் பண்டிகை நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் மகன் அகில் விஸ்வநாதன், அவரது தாய் அருணா பங்கேற்றனர்.பிளாக் பிரின்ட் மற்றும் கலை வடிவமைப்பில் தனித்துவ ஆடைகளை நான்கு ஆண்டுகளாக தயாரித்த அகில், அவற்றை இந்நிகழ்ச்சியில் 2.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டு, நரம்பியல் பாதிப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மேம்பாட்டுக்காக வழங்கினார்.இதுகுறித்து, சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி பேசியதாவது: விஸ்வநாதன் ஆனந்த் மகன் அகில், 11 வயதில் இருந்து தனி திறமையில் தயாரித்த பொருட்களை ஏலம் விட்டு, அதில் கிடைத்த நிதியை, மூளை வளர்ச்சி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கினார். அனைவருக்கும் சமூகத்தில் வாழ உரிமை இருப்பது போல், மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ