உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வாலிபால்: ராணி மெய்யம்மை பள்ளி முதலிடம்

 வாலிபால்: ராணி மெய்யம்மை பள்ளி முதலிடம்

சென்னை: வண்டலுார் அடுத்த வேங்கம்பாக்கத்தில், 'பிட் ஜி' எனும் தனியார் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி நடந்தது. மாணவியருக்கான பிரிவில், ராணி மெய்யம்மை, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள், வித்யோதயா, ஹார்ட்புல்னஸ் உள்ளிட்ட ஆறு பள்ளி அணிகள் பங்கேற்றன. போட்டியின் அரையிறுதியில், ராணி மெய்யம்மை - வேலம்மாள் அணிகள் நேருக்கு நேர் மோதின. இரு செட்களிலும், 15 - 12, 15 - 13 என்ற கணக்கில், ராணி மெய்யம்மை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில், வித்யோதயா அணி, செங்கல்பட்டு சி.எஸ்.ஐ., பள்ளி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தது. இறுதிப் போட்டியில், ராணி மெய்யம்மை அணி , 25 - 20, 25 - 23 என்ற நேர் செட் கணக்கில், வித்யோதயா அணியை வீழ்த்தி முதலிடத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ