மி.வா., தோண்டிய பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த தண்ணீர் லாரி
ஆலந்துார், மின் வாரியம் தோண்டிய பள்ளத்தில் சிக்கிய கவிழ்ந்த தண்ணீர் லாரி, கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.ஆலந்துார், ஜி.எஸ்.டி.,சாலையில் இருந்து ஆதம்பாக்கம் செல்லும் சாலையில், மின் வாரியம் சார்பில் கேபிள்கள் புதைப்பதற்காக, பள்ளம்தோண்டப்பட்டது. அது சரியாக மூடப்படவில்லை.இந்நிலையில், நேற்று அதிகாலை ஆலந்துார் மெட்ரோ ரயில் பணிக்காக, தண்ணீர் கொண்டு சென்ற லாரியை பிரபு என்பவர் ஓட்டி சென்றார். லாரியின் சக்கரம் மின் வாரியம் தோண்டியபள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.பரங்கிமலை போலீசார், ஒரு மணி நேரம் போராடி கிரேன் மூலம் மீட்டனர்.