உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் அத்துமீறல் மீன் வியாபாரிக்கு வலை

சிறுமியிடம் அத்துமீறல் மீன் வியாபாரிக்கு வலை

கொடுங்கையூர், கொடுங்கையூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 15ம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும், மீன் வியாபாரி நல்லமுத்து என்பவர் வீட்டில் விளையாடச் சென்றுள்ளார்.அப்போது, நல்லமுத்து கதவை உள்தாழிட்டு சிறுமியிடம் அத்துமீறி உள்ளார். இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன சிறுமி, இரு தினங்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நல்ல முத்துவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !