மேலும் செய்திகள்
வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர அழைப்பு
14-Apr-2025
சென்னை, தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் சேருவோருக்கு, அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.இந்த வாரியத்தில் சென்னையில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துாய்மை பணியாளர்களும் பயன்பெறும் வகையில், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் உதவி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள உதவி மையத்தை மேயர் பிரியா துவக்கி வைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.நல வாரியத்தில் உறுப்பினராக சேரும் அனைத்து வகையான தற்காலிக பணியாளர்ளுக்கும், விபத்து காப்பீடு, இயற்கை மரண உதவி தொகை, ஈமசடங்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.எனவே, துாய்மை நல வாரியத்தில் அனைத்து துாய்மை பணியாளர்களும் இணைந்து பயன்பெற வேண்டும் என, மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில், துாய்மை பணியை தனியார் மயக்கமாக்கலை கண்டித்தும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர், ரிப்பன் மாளிகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஊதியம், விடுப்பட்ட 21 மாத ஊதிய குழு நிலுவை தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையின்படி, மலேரியா பணி, துாய்மை பணி ஆகியவற்றில் ஈடுபடுபவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14-Apr-2025