நடிகர் பிரபுவுக்கு என்னாச்சு...? மூளையில் நடந்த ஆபரேசன்!
சென்னை: பிரபல நடிகர் பிரபுவுக்கு மூளையில் வெற்றிகரமாக ஆபரேசன் நடந்து முடிந்துள்ளது. 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரபு. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தீவிரமான காய்ச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மூளைக்கு செல்லும் ரத்த நரம்பில் வீக்கம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ஆபரேசன் செய்து அதனை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, நடிகர் பிரபுவுக்கு இன்று வெற்றிகரமாக ஆபரேசன் நடந்து முடிந்துள்ளது.தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பிரபு இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.