| ADDED : டிச 04, 2025 01:56 AM
மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்காக, 4,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக, நான்கரை ஆண்டுகளாக தி.மு.க., அரசு பெருமை பேசிய நிலையில், நாலாப்புறமும் சென்னையில் மழைநீர் தேங்கியிருக்கிறது. நான்கு பம்பு செட்டுகள் வாங்க தான், 4,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதா? ஆட்சி அரியணை ஏறியதில் இருந்து ஒவ்வொரு டிசம்பர் மாத மும் வெள்ளத்தில் மிதக்கவிடும் சாதனை போதாதென்று, ஆட்சி முடியும் கடைசி ஆண்டிலும் கடந்த மூன்று நாட்களுக்குள்ளேயே சென்னையை வெள்ளத்தில் தத்தளிக்கவிட்டு பெரும் சாதனை புரிந்திருக்கிறது தி.மு.க., அரசு. இந்த கொ டூரத்திற்கு மத்தியில், சென்னையில் பல இடங்களில் மழை நீரோடு, கழிவுநீரையும் கலக்கவிட்டு, நோய் தொற்றை உருவாக்கி, மக்களை கொல்லும் எமனாகவும் உருமாறி இருக்கிறது தி.மு.க., அரசு. மொத்தத்தில், மழைநீர் வ டிய கூட வழிவகுக்க இயலாத திறனற்ற நிர்வாகத்தை வைத்து கொண்டு, விடியல் அரசு என்று மார்தட்டி கொ ள்வதை கண்டால் தலையில் தான் அடித்து கொள்ள தோன்றுகிறது. - நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,