உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிகளுக்கான கிரிக்கெட் அரையிறுதியில் யார், யார்?

பள்ளிகளுக்கான கிரிக்கெட் அரையிறுதியில் யார், யார்?

சென்னை,சிட்டி பள்ளிகளுக்கு இடையே நடந்த காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ், பத்மா சேஷாத்ரி உள்ளிட்ட நான்கு பள்ளி அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றன. தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு சார்பில், சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள், நகரின் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. காலிறுதியின் முதல் போட்டியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 270 ரன்கள் அடித்தது. அடுத்து பேட் செய்த, மேற்கு மாம்பலம் அரசு பள்ளி அணி, 40.3 ஓவர்களில் 66 ரன்களுக்கு சுருண்டது. மற்றொரு போட்டியில், ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி, 49 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பேட் செய்த நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி, 45.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு, 172 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அணியின் வீரர் சித்தன் ஷங்கர் ராமன், 13 பவுண்டரியுடன் 100 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். மற்ற போட்டிகளில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி, 49 ரன்கள் வித்தியாசத்தில் செம்மஞ்சேரி ஜேப்பியார் பள்ளியையும்; கொளப்பாக்கம் ஹார்ட்புல்னெஸ் பள்ளி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியையும் வீழ்த்தின. இதையடுத்து, செயின்ட் பீட்ஸ், பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ மற்றும் ஹார்ட்புல்னெஸ் பள்ளி அணிகள், அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை