உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கணவர் ஓட்டிய கார் மோதி மனைவி உயிரிழப்பு

 கணவர் ஓட்டிய கார் மோதி மனைவி உயிரிழப்பு

சென்னை: ஆவடியில், கணவர் ஓட்டிய கார் மோதி, மனைவி பலியானார். ஆவடி, கோனாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 38; மனைவி இந்துமதி, 34. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஒரு மாதத்திற்கு முன், பழைய 'மாருதி ஷிப்ட்' காரை வாங்கிய ராஜா, ஓட்டி பழகி வருகிறார். நேற்று முன்தினம், குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார். வீட்டு வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்துவதற்காக முயன்று கொண்டிருந்தார். அவரது மனைவி இந்துமதி, சுவரில் கார் உரசாமல் இருப்பதை கவனித்து சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ராஜா, ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதாக தெரிகிறது. இதில், காருக்கும், சுவருக்கும் நடுவே இந்துமதி சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு நெஞ்சு, வயிற்றில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ