உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்து பயணியரை ‛பதம் பார்க்கும் கம்பிகள்

பேருந்து பயணியரை ‛பதம் பார்க்கும் கம்பிகள்

சென்னை செங்குன்றம், பேருந்து நிலையத்தில் இருந்து, மாநகர பேருந்துகள் வெளியே செல்ல, அம்பேத்கர் தெரு சிமென்ட் சாலை உள்ளது. அந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து, அவற்றின் கூர்மையான இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளன.பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணியர் மற்றும் பொதுமக்கள் அந்த கம்பிகளில் சிக்கி காயமடைகின்றனர். வாகன டயர்களும் கம்பி குத்தி சேதமடைகிறது.அதை சீரமைக்க வேண்டிய நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, 100க்கும் மேற்பட்ட பேருந்துகளில், நுழைவு கட்டணம் மட்டும் வசூலிக்கிறது. ஆனால், சாலை சேதத்தை கண்டு கொள்வதில்லை. அதனால், விபத்து, உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது.ராஜ்குமார், 55; செங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை