உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிபோதையில் தகராறு செய்த பெண் கைது

குடிபோதையில் தகராறு செய்த பெண் கைது

கோயம்பேடு: திருவொற்றியூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கனகவேல், 34; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 29ம் தேதி இரவு, இவரது ஆட்டோவிற்கு, தி.நகரிலிருந்து பாடிக்கு செல்ல, மொபைல் செயலியில் சவாரி வந்தது. தி.நகர் சென்று, அங்கு நின்ற பெண் மற்றும் ஆண் இருவரும் ஆட்டோவில் ஏறியுள்ளனர். பாடி வந்தும் இறங்க மறுத்த இருவரும், கோயம்பேடு, அம்பேத்கர் சிலை அருகில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளனர். ஆனால், கோயம்பேடு வந்தும் இறங்காமல், ஆட்டோவிலேயே மது குடித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீசார், இருவரிடமும் விசாரித்த போது, வீண் தகராறு செய்த அப்பெண், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதை அங்கிருந்த போலீசார் வீடியோ எடுத்தனர். கோயம்பேடு போலீசில் கனகவேல் புகார் அளித்தார். விசாரணையில், பாடி, ராஜா தெருவைச் சேர்ந்த யு - டியூப் சேனல் தொகுப்பாளினி ரேவதி, 34, அவரது உறவினர் ராஜா, 45, என்பது தெரிந்தது. இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், நேற்று இரவு அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், தன்னை போலீசார் தாக்கியதாக கூறி, காயங்களை காண்பித்து, ரேவதி வீடியோ வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை