உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.3 கோடி கஞ்சா கடத்திய பெண் கைது

 ரூ.3 கோடி கஞ்சா கடத்திய பெண் கைது

சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்த பெண்ணை, சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, இலங்கை வழியாக சென்னைக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு வந்தது. இதில், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று திரும்பிய 35 வயது வடமாநில பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்ததில் புதிய 'ஏசி' பாகங்கள் மூன்று பண்டல்களில் இருந்தன. அவற்றில் மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய 3 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண்ணை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்