உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியோரை திருமணம் செய்து மோசடி பலே பெண் சென்னையில் சிக்கினாள்

முதியோரை திருமணம் செய்து மோசடி பலே பெண் சென்னையில் சிக்கினாள்

படப்பை :மனைவியை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை குறிவைத்து திருமணம் செய்து, நகை, பண மோசடியில் ஈடுபட்ட 'பலே' கல்யாண ராணியை, போலீசார் கைது செய்தனர்.படப்பை அருகே ஆதனுார், டி.டி.சி., நகரைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி செசிலியா, 24. இவரது தந்தை வனத்தையன்; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த 2024ல் உயிரிழந்தார்.இந்நிலையில், செசிலியா தந்தையின் இரண்டாவது மனைவியான கோயம்புத்துாரைச் சேர்ந்த மடோனா, 47, என்பவர் மீது மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:கடந்த 1993ம் ஆண்டு ஊட்டி, மஞ்சனக்கோரை பகுதியைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி மகேந்திரன் என்பவரை, மடோனா திருமணம் செய்துள்ளார்.அவர் இறந்த பின், கடந்த 2014ம் ஆண்டு திருவள்ளூரைச் சேர்ந்த, மனைவியை இழந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கனகராஜ் என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார்.பின்னர் அவரை ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு மனைவியை இழந்து தனியே வசித்த என் தந்தையை 3வதாக திருமணம் செய்து, வங்கி கணக்கில் இருந்த 4.50 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார்.மேலும், தந்தையின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், தற்போது அடியாட்களுடன் வந்து மிரட்டி, வீட்டை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.புகாரின் அடிப்படையில், மணிமங்கலம் போலீசார் விசாரித்தனர்.இதில், மனைவியை இழந்து தனியே வசிக்கும் அரசு ஊழியர்களாக பார்த்து திருமணம் செய்து, நகை, பணம், சொத்து மோசடியில் மடோனா ஈடுபட்டது தெரிய வந்தது. கோயம்புத்துாரைச் சேர்ந்த அவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட மடோனா மீது, அரசு கருவூலத்தை ஏமாற்றி பணம் பெற்றதாக உதகை போலீசில் வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ